நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!" – விஜயவாடாவில் விறுவிறுப்பான ஆலோசனை!
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஆந்திர மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பதற்காக விஜயவாடா சென்றடைந்தார். நதிநீர் இணைப்பு மற்றும் கிருஷ்ணா நதி நீர் திறப்பை விரைவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், ஆந்திர மாநில முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பதற்காக விஜயவாடா சென்றடைந்தார். நதிநீர் இணைப்பு மற்றும் கிருஷ்ணா நதி நீர் திறப்பை விரைவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்புக்கு முன்னதாக, விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஆந்திர அரசு சார்பில் நடத்தப்படும் விஜயவாடா உத்சவ் 2.0 கலாச்சார விழாவில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
