மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டண விவரங்களை காட்சிப்படுத்துவது கட்டாயம்!" – அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அதிரடி கடிதம்!
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான கட்டண விவரங்களை ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலத்தின் தாய் மொழிகளில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான கட்டண விவரங்களை ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநிலத்தின் தாய் மொழிகளில் வெளிப்படையாகக் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். மருத்துவக் கட்டணங்களில் குழப்பத்தைத் தவிர்ப்பதுடன், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
