ஞானேஷ்குமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 14 பிழைகள்!" – உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தள்ளுபடி/விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை!
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் 14 பிழைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் 14 பிழைகள் இருப்பதாக உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ரூ. 220 கட்டணம் குறைவாகக் கட்டியது, போதிய ஆதார ஆவணங்கள் இல்லாதது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞரின் கையொப்பம் இல்லாதது போன்ற காரணங்களால் இந்த மனு இன்றைய விசாரணைப் பட்டியலில் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
