ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள்!" – 2027 பொங்கல் முதல் அமல் என அரசாணை வெளியீடு!
ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 3 சிலிண்டர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் உள்ள சுமார் 1.3 கோடி குடும்பங்கள் பயன்பெறும் இத்திட்டம், வரும் 2027 பொங்கல் திருநாள் முதல் அமலுக்கு வருகிறது. சிலிண்டருக்கான முழுத் தொகையும் பயனாளிகளின் வங்கிச் கணக்கில் நேரடியாக (DBT) திரும்பச் செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
