சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள வாகனங்கள்!" – சிஎஸ்கே (CSK) நிறுவனம் அசத்தல் நன்கொடை!
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம், சென்னை நகர போக்குவரத்து காவல்துறைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள 63 இருசக்கர வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிறுவனம் தனது பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியின் மூலம், சென்னை நகர போக்குவரத்து காவல்துறைக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள 63 இருசக்கர வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 38 ஹோண்டா ஷைன் மற்றும் 25 ராயல் என்ஃபீல்ட் புல்லட் மோட்டார் சைக்கிள்களை சென்னை காவல்துறை ஆணையர் ஏ. அமல்ராஜ் மற்றும் சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் கே. எஸ். விஸ்வநாதன் முன்னிலையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ரோந்துப் பணிகளை வலுப்படுத்தவும் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
