*டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்பப் பெற, ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் நிறுவும் டெண்டரை எதிர்த்து பாட்டில் வியாபாரிகள் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.*
டாஸ்மாக் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் டெண்டருக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு! காலியான டாஸ்மாக் மதுபாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்காக 'ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்களை' நிறுவும் டாஸ்மாக் நிர்வாகத்தின் டெண்டர் அறிவிப்பை எதிர்த்து வழக்கு..

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் நீதிபதி என்.செந்தில்குமார் டெண்டர் மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலும், டெண்டரில் எத்தனை பேர் பங்கேற்றனர் என அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

