ஞாயிறு, 11 அக்டோபர் 2026 10:23 AM
LIVE முக்கிய செய்திகள்
08:54குற்றவாளிகளை மன்னிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நீதிமன்றம்*08:53Flydubai விமானத்தில் இந்திய விமானி தாக்கப்பட்ட விவகாரம் - விசாரணையை தொடங்கியது NIA!*08:51மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - இன்று கூடுகிறது உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு!*08:50டெல்லி போலீசாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்!*08:49விஜய் எப்போதாவது எம்ஜிஆரை பார்த்திருப்பாரா? இருவருக்கும் என்ன தொடர்பு?"08:47இந்தியா குறித்து கவலை தெரிவித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு அறிக்கை!*08:46தருமபுரியில் பரபரப்பு: சட்டவிரோத கருவின் பாலின நிர்ணயம் செய்த கும்பல் கைது; மொபைல் ஸ்கேன் இயந்திரம் பறிமுதல்!*14:17பிரதமருடன் CM விஜய்14:15சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.14:13வானிலை*

குற்றவாளிகளை மன்னிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: நீதிமன்றம்*

“நாங்கள் குற்றவாளிகளை மன்னித்து மன்னித்துத்தான் நாடு இப்படி ஆகியிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்டுகிறோம்” - உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா கருத்து

கண்களைத் திறந்ததற்கு நன்றிகள், யுவர் ஆனர். கொடியவர்கள் நாட்டில் நடமாட யார் காரணம் என்பது இப்போதாவது புரிந்ததே... இதை அத்தனை நீதிமன்றங்களும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்.

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

“நீதிமன்றங்களின் மன்னிக்கும் மனப்பான்மையால்தான் இந்தியா இத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறது. மன்னிப்பு, மன்னிப்பு என்று போய்க்கொண்டே இருக்க முடியாது; ஒரு கட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

ஒரு தந்தை தனது மூத்த மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்திருந்தது. தாயின் சாட்சியத்தின் அடிப்படையில் அவர் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு பரோலில் வெளியே வந்த அவர், தனது இளைய மகளின் கண்முன்னே தாயைக் கொலை செய்தார். இளைய மகளின் சாட்சியத்தின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், இளைய மகளை அவர் கொலை செய்யவில்லை என்ற காரணத்தைக் காட்டி, உச்ச நீதிமன்றம் அந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இந்த மாதிரி, நீதிமன்றங்கள் குற்றவாளிகளை மன்னிக்கும் மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.”

கருணை மனு மீதான முடிவை எடுப்பதில் ஏற்பட்ட நீண்டகாலத் தாமதத்தைத் தொடர்ந்து, மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட ஒரு கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனுவை விசாரிக்கும்போது உச்ச நீதிமன்ற நீதிபதி திபங்கர் தத்தா இவ்வாறு குறிப்பிட்டார்.