வெள்ளி, 9 அக்டோபர் 2026 03:34 PM
LIVE முக்கிய செய்திகள்
15:32சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பெண் கைது -32 மதுபான பாட்டில்கள் பறிமுதல்*15:30பெண் சிறுத்தை சடலமாகக் கண்டெடுப்பு15:28தாராபுரத்தில் தவெக வெற்றி14:00ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரில் நான்கு மடங்கு கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.*13:53CJP போராட்டத்தால் நாளை டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து*13:48சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது*13:47மேற்குவங்கத்தில் பாஜக முன்னிலை*13:44TCS நிறுவனத்தின் லாபத்தால் உயர்ந்த ஐடி நிறுவன பங்குகள்*13:43இமாச்சலப் பிரதேசம்: ராம்பூர் அருகே அரசுப் பேருந்து சரிவில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 15 பேர் காயம்!*13:43மதுராந்தகம் மையத்தில் கூச்சல், குழப்பம்.*

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரில் நான்கு மடங்கு கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.*

2026-2027ஆம் கல்வியாண்டு மருத்துவப்படிப்புக்கான மூன்றாவது சுற்று கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது, இருப்பினும் ஏற்கனவே பெரும்பாலான MBBS, BDS இடங்கள் நிரம்பிய நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவக்கல்வி கட்டணமாக 5 லட்சத்து, 40 ஆயிரம் ரூபாயாக அரசு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை 20 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளதால், மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்உங்கள் விளம்பரம் இங்கே!ஆயிரக்கணக்கான வாசகர்களை அடையுங்கள்தொடர்பு கொள்ள

இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பு அடிப்படையில், கட்டணத்தை உயர்த்தியதாக கல்லூரி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கலந்தாய்வில் மூன்றாவது சுற்றில் சேரும் மாணவர்கள் மட்டும்யின்றி, முதல் இரண்டு சுற்றில் சேர்ந்த மாணவர்களிடமும் 20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படும், என ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அனால் கல்லூரில் சேர்ந்த பிறகு கல்வி கட்டணத்தை திடீரென மூன்று மடங்கு உயர்த்தினால் எப்படி கட்டுவது என மாணவர்களும், பெற்றோரும் திகைத்து போய் இருக்கின்றனர்.