சென்னையில் உலகின் மிக உயரமான 47.8 அடி பிரம்மாண்ட கொலு!" – உலக சாதனையை நோக்கிய நவரத்தினக் கொண்டாட்டம்!
சென்னை பெரம்பூரில் உள்ள SPR City வளாகத்தில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு 47.8 அடி உயரத்தில் பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயரமான கொலு என்ற புதிய உலக சாதனையைப் படைக்கும் முயற்சியாக, லண்டனைச் சேர்ந்த 'World Book of Records' அமைப்பின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
