உள்ளாட்சி அமைப்புகளின் மாமன்றக் கூட்டங்கள் குறித்து புதிய அரசு உத்தரவு!" – மேயர், துணை மேயர் இருக்கை வசதிகள் நிர்ணயம்!
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மாமன்றக் கூட்டங்களில் மேயர், நகர்மன்ற மற்றும் பேரூராட்சித் தலைவர்களின் அருகில் துணைத் தலைவர்கள் அமர்வதற்கான இருக்கை வசதி குறித்து நகராட்சி நிர்வாகத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, மைை மேடையில் தலைவருக்கு அருகில் இடதுபுறம் துணைத் தலைவர்களும், வலதுபுறம் ஆணையர் அல்லது செயல் அலுவலரும் அமர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்குச் சேலம் மாநகராட்சி துணைமேயர் சாராதேவி நன்றி தெரிவித்துள்ளார்.
