ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்: மயானத்தில் முதியவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின மக்களை காலில் விழ வைத்த வன்கொடுமை!" – பகுஜன் சமாஜ் கட்சி தொடர் போராட்டம் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டம் பெரும்பாலி கிராமத்தில், மயானத்தில் முதியவர் ஒருவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண் முன்பே பட்டியலின சமூகத்தினரை மாற்று சமூகத்தினரின் காலில் விழச் செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்யாமலும், அவர்கள் முன்ஜாமீன் பெற எதிர்ப்பு தெரிவிக்காமலும் காவல்துறை அலட்சியமாக இருப்பதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்தும் வரும் 19-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சி (BSP) அறிவித்துள்ளது.
